Sunday, June 21, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles