Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுபான சாலைகளுக்கு பூட்டு

மதுபான சாலைகளுக்கு பூட்டு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 15ஆம் திகதி போயா தினமாக இருப்பதால், இவ்விரு நாட்களிலும் பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் தினங்களில் விதிமுறைகளை மீறிச் சட்டவிரோதமான முறையில் செயற்படும் மதுபானசாலைகளுக்கு சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles