பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது மை பூசும் விறல் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தல் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்படாது எனவும் இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கையின் சிறிய விரலுக்கு மை பூசியதுடன் பலருக்கு இன்னும் மை அடையாளங்கள் உள்ளதால், இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை குறியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.