நியூசிலாந்துக்கு எதிராக தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது மற்றும் கடைசிமான 20- 20 போட்டியில் தோல்விடைந்தமைக்கு தாம் உட்பட துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பேற்பார்கள் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.
போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்கள் 3 பந்துகளில் 108 ஓட்டங்களைப் பெற்றது.
அதன்படி, நியூசிலாந்து அணியின் வலுவான களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சால் இரண்டு போட்டிகள் கொண்ட 20-20 தொடர் ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.