Sunday, August 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களினால் நாட்டிற்கு கிடைத்துள்ள வருமானம்

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களினால் நாட்டிற்கு கிடைத்துள்ள வருமானம்

வௌிநாட்டில் ​தொழில் புரியும் இலங்கையர்களினால் 2024 ஒக்டோபர் மாதத்தில் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டுப் பணம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி முதல் ஒக்டோபர் வரை கிடைக்கப்பெற்ற மொத்த வெளிநாட்டுப் பணம் 5,431.54 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 11.7% அதிகரிப்பு என மத்திய வங்கி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28,003 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles