Tuesday, December 3, 2024
25 C
Colombo
செய்திகள்உலகம்பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் காரணமாக எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள்,மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசலைகள் 12ஆம் திகதி பாடசாலை முடிவடைந்த பிறகு அந்தந்த கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுவதோடு நவம்பர் 18ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles