Tuesday, April 1, 2025
26 C
Colombo
அரசியல்தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடல்

தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடல்

நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (06) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயும் வகையிலேயே மேற்படி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று (06) இடம்பெறவுள்ள மேற்படி பேச்சுவார்த்தையில் அனைவரும் பங்கேற்கவேண்டுமென, ஆணைக்குழுவினால் அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles