Tuesday, August 19, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுதன்முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐஸ்லாந்து சுற்றுலாப் பயணிகள்

முதன்முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐஸ்லாந்து சுற்றுலாப் பயணிகள்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஐஸ்லாந்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று (5)காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

24 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இந்தக் குழு 14 நாட்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

24 மணித்தியாலங்கள் நீண்ட விமானப் பயணத்தின் பின்னர், காலை 08.33 மணியளவில் Emirates Airlines விமானமான EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கொழும்பு, ஹபரணை, கண்டி, சீகிரியா, தம்புள்ளை, பெந்தோட்டை, எல்ல மற்றும் யால ஆகிய பகுதிகளை பார்வையிடுவதற்காக குறித்த குழுவினர் வருகை தந்திருப்பதாகதெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles