Thursday, November 14, 2024
26.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சை தொடர்பில் வௌியான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வௌியான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை தொடர்பான அட்டவணையைப் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்து மாத்திரம் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார்.

மேலும், 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OTT வெளியீட்டை தள்ளி வைக்க கோரிக்கை

அமரன் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் காரணத்தால் அப்படத்தின் ஓடிடி வௌியீட்டை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெட் ஜெய்ண்ட மீவிஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு...

Keep exploring...

Related Articles