Thursday, March 13, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாராளுமன்ற தேர்தலுதக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

பாராளுமன்ற தேர்தலுதக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுதக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை தவிர்ந்து, அடுத்த மாதம் 4ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், முப்படை முகாம்களிலும், அனைத்து அரச நிறுவனங்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக அடுத்த மாதம் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக 750,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles