Wednesday, August 20, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது

இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் ஹெஸ்புல்லா தரப்பினருக்கு எதிராக நடத்தும் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகளை இலக்கு வைத்துச் சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் மற்றுமொருவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles