Wednesday, July 30, 2025
27.2 C
Colombo
செய்திகள்விளையாட்டுIPL தொடருக்கான மெகா ஏலம் திகதி அறிவிப்பு

IPL தொடருக்கான மெகா ஏலம் திகதி அறிவிப்பு

10 அணிகள் பங்கேற்கும் 18-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது.

அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான மெகா ஏலம் எதிர்வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த ஏலத்தை சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் மெகா ஏலமானது இறுதியாக கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் மெகா ஏலத்தை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் குழு தற்போது சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles