கொழும்பு – புத்தளம் வீதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – புத்தளம் வீதியில் கட்டுநாயக்க 18 ஆம் கட்டைக்கு அருகில் லொறியும் முச்சக்கரவண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 67 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கட்டுநாயக்க 18 ஆம் கட்டைக்கு அருகில் மினுவாங்கொடை நோக்கி திரும்பும் போது நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.