Sunday, February 16, 2025
31 C
Colombo
சினிமாதனுஷின் 'இட்லி கடை' - வெளியான புதிய அறிவிப்பு

தனுஷின் ‘இட்லி கடை’ – வெளியான புதிய அறிவிப்பு

தனுஷ் இயக்கி, அவரே நடிக்கும் 52 ஆவது படத்துக்கு ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், நான்கு படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இட்லி கடை படத்தை டான் பிசர்ஸ் நிறுவனமும், தனுஷின் வுண்டர் பார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது.

படத்தில் தனுஷுடன் இணைந்து, சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles