Saturday, April 19, 2025
26 C
Colombo
சினிமா'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு

நடிகர் அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அஜித் தற்போது ஒரே நேரத்தில் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளிக்கும், ‘குட் பேட் அக்லி’ பொங்கல் திருநாளுக்கும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஆதிக் ரவிச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘குட் பேட் அக்லி’ அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles