அசாதாரணமான விதத்தில் வசூலிக்கப்படும் வரிக்கான சூத்திரம் மாற்றியமைக்கப்பட்டு, பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 21ஆம் திகதி முழு நாடும், நாட்டு மக்களும் வெற்றியடைவார்கள்.
அனுரகுமார திஸாநாயக்கவும் ரணில் விக்ரமசிங்கவும் ஒரே கூட்டணியாக உள்ளனர். சஜித் பிரேமதாசவை தோற்கடிக்க வேண்டும் என அவர்கள் இருவரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
நாம் நாட்டுக்குச் சேவையாற்றுவோம் என அவர்கள் அச்சமடைகின்றனர் என்றார்.