Saturday, March 8, 2025
30 C
Colombo
அரசியல்அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் - ஜனாதிபதி

அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் – ஜனாதிபதி

சிங்களம், தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (17) நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியின் பொதுக்கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் சரிந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டு மக்கள் பொறுமை காக்கும் வேளையில், எதிர்க்கட்சியினர் அதிகாரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதை நினைவு கூர்ந்தார்.

கடந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles