சாவகச்சேரி பளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 37 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 94 கிலோ 520 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
பளை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மற்றும் கேரள கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.