இரு நிபந்தனைகளுடன் நடிகர் தனுஷ் மீதான ரெட் கார்டை தயாரிப்பாளர் சங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ் இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடம், அவர்களுடைய திரைப்படத்தில் நடிப்பதற்காகப் பெற்ற முற்பணத் தொகையை வெகு நாட்களாகத் திருப்பிச் செலுத்தாமல், அதே சமயம் அவர்களுக்குப் படம் நடித்துக் கொடுக்காமலும் இருந்த நிலையில், அவருக்குத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரெட் கார்ட் விதித்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
இரு நிபந்தனையோடு நடிகர் தனுஷ் மீது விதிக்கப்பட்ட ரெட் காடை தாங்கள் இரத்துச் செய்வதாகவும் தயாரிப்பாளர் சங்கம் தற்பொழுது அறிவித்திருக்கிறது.
அதன்படி தேனாண்டால் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தை நடித்துக் கொடுக்க தற்பொழுது தனுஷ் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ‘பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்திடம் அவர் பெற்ற முற்பணத் தொகையை வட்டியோடு திரும்ப அவர்களுக்குச் செலுத்த தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.