Wednesday, February 12, 2025
32 C
Colombo
வடக்குவவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்

தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தால் அரச பேருந்து தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி போக்குவரத்துச் சபையின் வவுனியா ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles