தனது கவனத்துக்கு கொண்டு வராமலும், ஒப்புதல் இல்லாமலும் விவாகரத்து அறிவிப்பை ஜெயம் ரவி வெளியிட்டதாக அவரது மனைவி ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.
மேலும், தானும் தனது இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
கடந்த 9ஆம் திகதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு பிறகு ஜெயம் ரவியின் முடிவானது கலந்து ஆலோசிக்காமல் அவரே தன்னிச்சையாக எடுத்தது என்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,