Monday, October 7, 2024
25 C
Colombo
அரசியல்ரணில் நத்தார் தாத்தா போன்று வாக்குறுதியளிக்கிறார் - திஸ்ஸ அத்தநாயக்க

ரணில் நத்தார் தாத்தா போன்று வாக்குறுதியளிக்கிறார் – திஸ்ஸ அத்தநாயக்க

இந்த வருட ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவினால் மாத்திரமே வெற்றியீட்ட முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க நத்தார் தாத்தா போன்று ஒவ்வொன்றை வழங்குவதாக உறுதியளிக்கிறார் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

திகன பிரதேசத்தில் இன்று (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டிலுள்ள அனைத்து தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் பொருத்தமான ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என்றும், நாட்டில் எரிபொருள், எரிவாயு வரிசைகள் இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையே தற்போதும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles