முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றில் கடமையாற்றிய பெண்கள் நால்வர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (05) பிற்பகல் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் கடமையாற்றிய நான்கு பேர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
போரின் போது புதைக்கப்பட்ட குண்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வெடிகுண்டு செயலிழப்பு அமைப்பில் பணியாற்றிய நாலவர் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்ணிவெடியை மிதித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.