Tuesday, January 14, 2025
28 C
Colombo
சினிமாபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நிவின் போலி

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நிவின் போலி

மலையாள திரையுலகின் பிரபல நடிகரான நிவின் போலி, ஒரு வருடத்திற்கு முன்பு டுபாயில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றச்சாட்டை நிராகரித்த நடிகர் நிவின் போலி, தனது உரிமையை நிரூபிப்பதற்கு சாத்தியமான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணின் வாக்குமூலத்தில் தனக்கு நிவின் போலி சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் பிரதிவாதிகளாக 6 பேர் பெயரிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .அதில் முதல் பிரதிவாதியாக பெண் ஒருவரும், நிவின் போலி ஆறாவது பிரதிவாதியாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்பு டுபாயில் நடந்ததாக கூறப்படுகிறது.

வழக்கு பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர், நிவின் போலி தனது ஃபேஸ்புக் கணக்கில் குற்றச்சாட்டுகள் ‘முற்றிலும் தவறானவை’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தீர்மானித்துள்ளதாகவும், இதற்குக் காரணமானவர்களை அம்பலப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, ஊன்னுக்கல் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தன்னை அழைத்து, அவருக்கு எதிராக ஒரு பெண்ணிடம் இருந்து பாலியல் வன்புணர்வு தொடர்பான முறைப்பாடொன்று வந்துள்ளதாக தெரிவித்ததாக அவர் கூறினார்.

தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும், ‘இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும்’ என அவர் நம்புவதால், இறுதிவரை தான் போராடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உட்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles