சஜித்தும் அனுரவும் இன்று அரசியல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் இரவில் விழுந்த குழியில் பகலில் விழ வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் சிலாபம் தென்னை பயிர்செய்கையை அபிவிருத்தி செய்து மாதம்பே பொருளாதார வலயத்தை உருவாக்குவதுடன் சிலாபம் துறைமுகமும் பிரதான துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.