பொருளாதார நெருக்கடி காரணமாக அனைவரும் ஓடிய போது நாட்டின் எதிர்காலத்திற்காக நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (01) பிற்பகல் தொம்பே பேருந்து நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைக் கைப்பற்றவில்லையென்றால் இலங்கை இன்னொரு பங்களாதேஷாக மாறியிருக்கும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.