ஏழை என்ற வார்த்தை தனக்கு பிடிக்காது எனவும், நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கோட்டே தொகுதிக் காரியாலயத்தை இன்று (28) திறந்து வைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நாம் வெற்றிபெற வேண்டிய தேர்தல் இது எனவும், பொருளாதார நெருக்கடியில் வாடும் மக்களை எப்படியாவது மீட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.