நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும், நாட்டை மீட்பதற்காக கடந்த இரண்டு வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்காகவே இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நேற்று (27) நடைபெற்ற சத்கோரல மகா சங்க மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் என்ற வகையில், இந்நாட்டில் துன்பப்படும் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் தெரிவித்தார்.