Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
அரசியல்அனுரவுக்கும் சஜித்துக்கும் சவால் விடுத்த ரணில்

அனுரவுக்கும் சஜித்துக்கும் சவால் விடுத்த ரணில்

இனியும் மக்களுக்கு பொய் சொல்லிக் கொண்டிருக்காமல் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைய மூலம் பகிரங்கமான கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு சவால் விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன் ஊடாக, மேடைகளில் அவர்கள் சொல்லும் விடயங்களில் உள்ள உண்மைத் தன்மையை மக்களால் கண்டு கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், அவ்வாறு நடந்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, வரிகளை குறைப்பதாகவும் பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும் தமது கொள்கைப் பிரகடனங்களில் சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்க முயற்சிப்பதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருட்களின் விலைகளையும் வரிகளையும் குறைக்க தானும் விரும்புவதாகவும், எனினும், ரூபாயை பலப்படுத்தி, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் மாத்திரமே தன்னால் அதனைச் செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதனைத் தவிர வேறு மாற்றுவழி இருந்தால் உடனடியாக ஐ.எம்.எப் உடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் அதனை சமர்ப்பித்து கருத்தரிந்து கொள்ளுமாறு சஜித் பிரேமதாஸவிடமும் அநுர திசானாயக்கவிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

பிட்டகோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று பிற்பகல் (25) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விசேட சம்மேளனத்தில் பெருமளவிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கையைக் கட்டியெழுப்பும் பணியை மேற்கொள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கும் அவரின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கும் ஐ.தே.க ஆதரவாளர்களின் உடன்பாட்டை தெரிவிப்பதற்குமான பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டாரவினால் கட்சி சம்மேளனத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பிரேரணையை ஐ.தே.க தேசிய அமைப்பாளர் சாகல ரத்னாயக்க வழிமொழிந்தார். அதனையடுத்து அனைவரும் கைகளை உயர்த்தி ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இதன் போது மறுசீரமைக்கப்பட்ட சிறிகொத்த கட்சி தலைமையகமும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles