எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தீர்மானித்துள்ளார்.
இதற்கு முன்னர் அவர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு அசோக பிரியந்த தனது தீர்மானத்தை தெரிவித்துள்ளார்.