சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லொகார்னோ திரைப்பட விருது விழாவில் கலந்துக்கொண்ட பொலிவூட் நடிகர் ஷாருக்கானை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஷாருக்கான் அருகில் இருந்த முதியவரை தள்ளி விடும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குறித்த காணொளியை பார்த்த பலரும் ஷாருக்கானுக்கு விசனம் தெரிவித்து வரும் நிலையில் அவரின் ஆதரவாளர்கள், ஷாருக் பின்னாடி தள்ளி விட்ட நபர் அவரின் பழைய நண்பரொருவர் என தெரிவித்துள்ளனர் .
குறித்த விழாவின் போது ஷாருக் ‘பர்டோ அல்லா கேரியரா ‘ விருது வென்றுள்ளதுடன் இந்த மதிப்புமிக்க விருதை பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது .