Wednesday, January 15, 2025
30 C
Colombo
சினிமாபிக் பொஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகினார் கமல் ஹாசன்

பிக் பொஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகினார் கமல் ஹாசன்

விஜய் டிவியின் பிக்பொஸ் நிகழ்ச்சித் தொடரை தொகுத்து வழங்கப் போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்ற குறித்த நிகழ்ச்சியை தமிழில் இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில், பிக்பொஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது தொடரைத் தொகுத்து வழங்கப் போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் நேற்று (06) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்த அறிக்கை பின்வருமாறு:

7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்தில் ஒரு சிறிய இடைவேளை எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைத்படத்துறை வேலைப்பளு காரணமாக, பிக் பொஸ் நிகழ்ச்சியின் எதிர்வரும் 8 ஆவது தொடரை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.

பிக் பொஸ் நிகழ்ச்சியின் மூலம் உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு நான் என்றென்றும் நன்றி கூறுகிறேன்.

பிக் பொஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாற்றுவதற்கு உங்கள் உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவே போட்டியாளர்களுக்கு அடிப்படையாக இருந்தன.

நான் எனது கருத்துக்களை நேர்மையாக பகிர்ந்து கொண்டேன். இந்தக் கற்றல் அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

என்னுடன் ஒன்றாக நேரம் செலவழித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன், விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிறுவனத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தொடர் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles