ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தாம் களமிறங்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசத்திற்கு நேற்று (06) அவர் அனுப்பிய கடிதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தாம் களமிறங்க போவதில்லை என அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.