தயாசிறி ஜயசேகர மற்றும் சஜித்துக்கு இடையில் இன்று (07) புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கான உடன்படிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழு ஒன்று கைச்சாத்திட்டுள்ளது.
இந்த நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பத்தரமுல்லையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.