அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ரோசெஸ்டர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் 20 வயதுடையவர் எனவும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.