கொழும்பு பிரதான வீதியின் வடக்கு பயாகல பகுதியில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் பேருந்தை முந்த முயன்ற போது எதிர்திசையில் வந்த லொறி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியில் மோதுண்டு வீழ்ந்த குறித்த நபர் பின்னால் வந்த பேருந்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் 25 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மனைவியையும் குழந்தையையும் பார்ப்பதற்காக சென்றுக் கொண்டிருந்த நிலையில் அவர் இந்த துரதிஷ்ட சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.