எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு, நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.