தொம்பகஹவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கெப் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் தொம்பகஹவெல பொலிஸ் எல்லைக்குட்பட்ட தொம்பகஹவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பொலேரோ ரக கெப் வண்டியும் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் பின்ன,இ கெப் வண்டியின் சாரதியும் அதில் பயணித்த மற்றுமொருவரும் வண்டிக்குள் சிக்கிக் கொண்டதாகவும், அவர்களை மீட்க பாரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மஹகளுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இருவரும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.