இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நேற்று (19) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது “இந்திய வீடமைப்பு திட்டம், நீர் கட்டண திருத்தம், சமகால அரசியல், கல்வி மற்றும் மலையக அபிவிருத்தி சார் விடயங்கள்” தொடர்பாக இருவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றது.