பி.எஸ் மித்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சண்டைக் கலைஞர் ஒருவர் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
மார்பு பகுதியில் பலமாக அடிபட்டு நுரையீரலில் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக விருகம்பாக்கம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.