Saturday, April 19, 2025
32 C
Colombo
வடக்குகொக்குத்தொடுவாய் அகழ்வு பணி நிறைவு - 52 மனித எச்சங்கள் அடையாளம்

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணி நிறைவு – 52 மனித எச்சங்கள் அடையாளம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 52 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 10ஆவது நாளான நேற்றுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வுப் பணியின்போது துப்பாக்கிச் சன்னம், திறப்பு கோர்வை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், கிராம சேவையாளர் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் பத்தாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles