Tuesday, March 18, 2025
31 C
Colombo
சினிமாஇயக்குநர் ரவி ஷங்கர் உயிரை மாய்த்துக் கொண்டார்

இயக்குநர் ரவி ஷங்கர் உயிரை மாய்த்துக் கொண்டார்

இயக்குநர் ரவி ஷங்கர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இயக்குநர் விக்ரமன் திரைப்படங்களில் பணிபுரிந்த அவர், 2002ஆம் ஆண்டு வெளியாகிய ‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தை இயக்கியுள்ளார்.

அப்படத்தின் அனைத்து பாடல் வரிகளையும் அவர் எழுதிள்ளதுடன், சூர்யவம்சம் திரைப்படத்தில் இடம்பெற்ற ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ எனும் பிரபல பாடலின் வரிகளை எழுதியதும் இவரே.

சென்னை – கே.கே.நகரில் உள்ள தன் வீட்டின் அறையில் நேற்றிரவு இவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

63 வயதான ரவி ஷங்கரின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles