Sunday, May 25, 2025
30 C
Colombo
வடக்குவேன் - லொறி மோதி விபத்து: பெண் ஒருவர் பலி

வேன் – லொறி மோதி விபத்து: பெண் ஒருவர் பலி

முல்லைத்தீவு – முறுகண்டி பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், வேனில் பயணித்த 84 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில், இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles