Wednesday, February 5, 2025
28 C
Colombo
கிழக்குமட்டக்களப்பில் தோண்டப்பட்ட ஆயுதக்கிடங்கு – பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பில் தோண்டப்பட்ட ஆயுதக்கிடங்கு – பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்கு ஒன்று தோண்டப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான ஆயுதங்கங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் நேற்று விசேட அதிரடிப்படையினரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது 20 ஆயிரம் ரி56 ரக துப்பாக்கி ரவைகளும், 300 கண்ணி வெடிகளும், 38 வெடி மருந்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

அம்பாறை கட்டளைத்தளபதி உதவி கட்டளை அதிகாரியின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் குறித்த அகழ்வுப்பணி நேற்று இடம்பெற்றது.

இதன்போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன், வெடிப்பொருட்களை கரடியனாறு பொலிஸார் பொறுப்பேற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles