Tuesday, January 14, 2025
24.8 C
Colombo
வடக்குகுளியலறையில் கெமரா - பெண்கள் விடுதியை மூட உத்தரவு

குளியலறையில் கெமரா – பெண்கள் விடுதியை மூட உத்தரவு

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் விடுதியின் குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமரா கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக குறித்த விடுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தெல்லிப்பளை பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த விடுதி தொடர்பில் இதற்கு முன்னரும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் உண்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உடனடியாக குறித்த விடுதியை மூடி, அதன் பொறுப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் அதிகார சபைக்கு அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles