Saturday, December 20, 2025
28.4 C
Colombo
வடக்குயாழில் ஹெரோயினுடன் பெண்கள் இருவர் கைது

யாழில் ஹெரோயினுடன் பெண்கள் இருவர் கைது

யாழில் நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வூரி ஐந்தாம் குறுக்கு ஓட்டமாடமி பகுதி மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 112 யமுனாவிடி நல்லூர் ஆகிய முகவரிகளில் நேற்று (02) இரண்டு சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02 கிராம் 490 மில்லிகிராம் ஹெரோயினுடன் அராலி தெரு ஐந்தாம் குறுக்கு ஓட்டமாடமி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணும், 01 கிராம் ஹெரோயின் மற்றும் 270 மில்லிகிராம் ஹெரோயினுடன் நல்லூர் யமுனாவீதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு பெண்களும் நீண்டகாலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles