நடிகை சுனைனா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் அவரே தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
நடிகை சுனைனா தமிழில் காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் மாசிலாமணி, திருத்தணி, தெறி, வம்சம், சமர், நீர்ப்பறவை எனப் பலப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும், இவர் நடிப்பில் ரெஜினா என்ற திரைப்படம் இறுதியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், நடிகை சுனைனா தனது இன்ஸ்டா பக்கத்தில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் பதிவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து அவர் டுபாயைச் சேர்ந்த பிரபல யூடியுபர் காலித் அல் அமேரி என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.