Tuesday, August 19, 2025
29.5 C
Colombo
ஏனையவைசீனாவுக்கு ஆபாச வீடியோக்களை விற்ற இரு தம்பதியினர் கைது

சீனாவுக்கு ஆபாச வீடியோக்களை விற்ற இரு தம்பதியினர் கைது

பாலியல் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்து வந்த இரு இளம் ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலியந்தலை படகெத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த குறித்த இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செயற்பாடு மூலம் அவர்கள் அதிக அளவில் பணம் சம்பாதித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், பொலிஸ் சோதனையின் போது, ​​காணொளிகளை எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய இரு ஜோடிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles