நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பொரலந்த பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசுவொன்றின் சடலமொன்று நேற்று (13) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் முழுவதும் சிதைவுண்ட நிலையில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பதில் நீதவான்விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சிசுவின் சடலத்ததை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உதவியுடனும் அப்பகுதியில் உள்ள பிரதேச தாதியர்களின் உதவியுடன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக விசாரணையை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.