Friday, January 17, 2025
28.6 C
Colombo
வடக்குயாழில் இரு பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை கையளித்த சஜித்

யாழில் இரு பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை கையளித்த சஜித்

யாழ்ப்பாணம் சென் சார்ள்ஸ் மகா வித்தியாலய ஸ்மார்ட் வகுப்பறை நேற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைக்கு நேரில் சென்று , ஸ்மார்ட் வகுப்பறையை உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன் , 05 கணினிகள் , பிரிண்டர் மற்றும் ஸ்மார்ட் போர்ட் (smart board) ஆகியவற்றையும் கையளித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் , மாணவர்கள் ஆங்கில மொழி புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர் , ஆங்கிலம் கற்பதற்கான வழிமுறைகளையும் எடுத்து உரைத்தார்

அத்துடன் பாடசாலைக்கு அரங்குடன் கூடிய இரட்டை மாடி கட்டடம் ஒன்றினை அமைத்து தருவதாக உறுதி அளித்த எதிர்க்கட்சி தலைவர் , நடனம் கற்கும் மாணவிகளுக்கான நடன உடைகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றுக்காக ஒரு மில்லியன் ரூபா நிதியினையும் கையளித்தார்.

இதேவேளை,யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவால் ஸ்மார்ட் வகுப்பறை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் நேற்றைய தினம் கல்லூரிக்கு சென்று 11 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்களுடன் ஸ்மார்ட் வகுப்பறையை கையளித்தத்துடன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்ச ரூபா நிதியுதவியையும் வழங்கி வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles